திட்ட மேலாண்மை

தமிழில் ப்ராஜெக்ட் மேனஜெமென்ட்

காண்ட் வரைபடம்

பின்னூட்டமொன்றை இடுக


காண்ட் வரைபடம் என்பது ஒரு வகையான பட்டை வரைபடம் ஆகும். ஹென்றி காண்ட் என்பவரால் 1910களில் உருவாக்கப்பட்டது. இது திட்ட அட்டவணையின் நிலையை விவரிக்க பயன்படுகிறது. இந்த வகையான வரைபடங்கள் அல்லது விளக்கப்படங்கள் திட்டங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

காண்ட் வரைபடம் ஒரு ப்ராஜக்டின் அட்டவணையை கிராஃபிக்களாக காட்ட உதவுகிறது. காண்ட் வரைபடம் திட்டத்தின் பணிகளின் வரிசையையும், அதன் துவக்க மற்றும் முடியும் தேதியை கொண்டிருக்கும். காலவரிசைப்படி திட்ட பணிகளை அவை கொண்டிருக்கும்.

எதற்க்காக பயன்படுத்தவேண்டும் ?

  1. ஒரு பெரிய திட்டதின் பணிகளை சிறிது சிறிதாக பிரித்து அறிய உதவுகிறது
  2. திட்ட பணிகளின் நீளம் எவ்வளவு அல்லது எவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பதனை அறியலாம்.
  3. திட்டத்தின் பணிகளில்
    எவை எவை நிறைவடைந்துள்ளது
    , பாதியிலுள்ளது, தொடங்கவையில்லை போன்றவற்றை அறியலாம்
  4. ஒரு திட்டதின் பணி வேறொரு பணியோடு எவ்வொரு தொடர்புடையுது என்றும் அதனால் வரும் பதிப்புகள் போன்றவற்றையும் அறியலாம்.
  5. திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும் உதவுகிறது

காண்ட் வரைபட எடுத்துக்காட்டு:


பிற இணைப்புகள்:

http://dailydoseofexcel.com/archives/2008/05/10/simple-gantt-chart/

http://theresearchwhisperer.wordpress.com/2011/09/13/gantt-chart/

வேறொரு வலைப்பதிவு இடுகையில் எவ்வாறு ஒரு காண்ட் வரைபடத்தை தயார் செய்யலாம் என்று பார்ப்போம். நன்றி.

பதிவர்: Siva Karthikeyan Krishnan

Professional with lot of passion in architecting solutions to business problems.

பின்னூட்டமொன்றை இடுக