திட்ட மேலாண்மை

தமிழில் ப்ராஜெக்ட் மேனஜெமென்ட்

திட்டத்தில் இடர்களின் நிலைகள்

பின்னூட்டமொன்றை இடுக


திட்டத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் வெவ்வேறு வகையான இடர் காரணிகள் இடம்பெரும். இந்த இடர் காரணிகளை ஆராய்ந்து அதை களைவதர்க்காண முயற்சி எடுப்பதன் மூலம் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தலாம்.

திட்டத்தின் எல்லா நிலைகளிலும்:

  • திட்டத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொரு நிலைகளிலும் போதுமான நேரம் செலவிடாமல் இருப்பது.
  • திட்டத்தின் முக்கியமான முடிவுகளும் தகவல்களும் எழுத்துபூர்வமாக இல்லாதாது.
  • திட்டத்தின் முக்கிய கட்டத்தை முடிக்காமலே அடுத்தக்கட்டதிற்க்கு செல்வது.

திட்டத்தின் தொடக்க நிலையில்:

  • திட்டத்தின் பின்புலம் சரியாக புரியாமல் இருப்பது, அல்லது திட்டத்தின் பின்புலம் எழுத்து வடிவில் இல்லாமலிருப்பது.
  • செலவு பயன் பகுப்பாய்வு புரியாமல் திட்டத்தை தொடங்குவது
  • திட்டத்தின் சாதியக்கூறுகளை ஆராயாமல் திட்டத்தை தொடங்குவது

திட்டத்தின் அமைப்பு மற்றும் தயாரிப்பு நிலையில்:

  • திட்டத்தை முன் அனுபவம் இல்லாமல் யாராவது தயார் செய்வதால்
  • திட்டம் எழுத்து வடிவில் இல்லை.
  • திட்டத்தின் சில அல்லது அனைத்து அம்சங்களிலும் அனைத்து முக்கிய பார்வையாளர்களின் ஒப்புதல் இல்லை.

திட்டத்தின் செயல்படுத்தும் நிலையில்:

  • திட்டத்தை திட்டத்தின் குழுவில் இருக்கும் நபர்கள் தயாரிக்கவில்லை.
  • திட்டத்தின் அடையாளத்தை நிறுவ மற்றும் கவனம் செலுத்த முயற்சி செய்யவில்லை.
  • திட்ட முன்னேற்ற அறிக்கை நிலையற்று உள்ளது.

பதிவர்: Siva Karthikeyan Krishnan

Professional with lot of passion in architecting solutions to business problems.

பின்னூட்டமொன்றை இடுக