ஸ்க்ரும் ஒரு அனுபவாதம் சார்ந்த செயல்முறை கட்டுப்பாட்டு கோட்பாட்டின் மூலம் உருவாகியது. அறிவு என்பது நாம் அறிந்திருக்கும் அனுபவம் மற்றும் செய்யும் முடிவுகளில் இருந்து வரும் அனுபவங்களினால் எட்டப்படுகிறது என்பதை அனுபவாதம் உறுதிசெய்கிறது.
ஸ்க்ரும் பல் செயலாற்று (இடரேடிவ்), கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் போன்ற முறைகளை பயன்படுத்தி முன்கூட்டியே கணிக்கவும் இடர்களை கட்டுபடுத்தவும் உதவுகிறது.
அனுபவம் சார்ந்த நிகழ்முறை கட்டுப்பாட்டினை மூன்று முக்கிய தூண்கள் நிர்வகிக்கின்றனாவ அவையாவையெனில்:
- வெளிப்படைத்தன்மை(transparency)
- பார்வையிடுதல் (இன்ஸ்பெக்க்ஷன்)
- தழுவல் (அடேப்ஷன்)
1. வெளிப்படைத்தன்மை
பணியின் முக்கிய அம்சங்கள் விளைவுக்கு பொறுப்பானவர்கள் காணும்படி வெளிப்படையாக இருத்தல் வேண்டும். அந்த முக்கிய அம்சங்களும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஏதேனும் ஒரு தரநிலைய கொண்டிருத்தல் அவசியம். இது அனவரும் ஒரே விதத்தில் புரிந்து கொள்ள உதவும்.
எடுத்துக்காட்டு:
1. ஒரு செயல்முறையில் உள்ள வார்த்தைகள்அனைவரிடமும் பகிரப்பட்டு அது ஒரே அர்த்தத்தைகொடுக்க வேண்டும்.
2. “செய்துமுடிக்கபட்டது” என்பதற்கான விளக்கம் வேலை செய்பவர்க்களுக்கும் அதனை அமோதிப்பவர்களும் ஒத்துக்கொள்ள கூடிய வகையில் இருக்கவேண்டும்.
2. பார்வையிடுதல் (இன்ஸ்பெக்க்ஷன்)
ஒரு ஸ்பரின்ட் குறிக்கோளை அடைவதில் உள்ள தேவையற்ற தடைகளை கலையவேண்டும் என்றால் ஸ்க்ரும் பயனாளிகள் அடிக்கடி ஸ்க்ரும் தரவுகளையும், ஆர்டிபாக்ட்டுகளைரும் மற்றும் முன்னேற்றத்தை பார்வையிடுதல் அவசியம். அவர்களின் பார்வையிடுதல் அவர்களின் வேலையை தடை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பார்வையிடுதல் பணி அனுபவம்மிக்க கண்காணிப்பாள்ர்களால் செய்யும் வேலை நேரத்தில் பொழுது சிறந்த பலன்களை தருகிறது.
3. தழுவல் (அடேப்ஷன்):
ஒரு கண்காணிப்பாளர் ஒன்றோ அதற்க்கு மேற்ப்பட்ட செயல்கள் ஏற்கத்தக்க வரம்பில் இருந்து விலகிச் செல்வததாக இருந்தால் தயாரிக்கும் பொருளானது ஏற்றுக்கொள்ளப்படாத. ஆகையால் நாம் இந்த செயல்களையோ அல்லது தயாரிப்பையோ நாம் சரி செயாவேண்டும். நாம் எவ்வளவு சீக்கிரம் சரி செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்தல் மேலும் பல செயல்கள் விலகிச் செல்வதை தடுக்க முடியும்.